மன்னார் மாவட்டத்தில் ஜக்கியமதங்கள் ஒன்றியம் வைபவ ரீதியாக அங்குரர்பணம்.

201
மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மதங்களின் ஒன்றியம்(United Religions Initiative) 12-12-2018 ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் மாவட்டசர்வோதய இணைப்பாளர் சீ.யுகேந்திராதலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு ஜக்கிய மதங்கள்-URI ஒன்றியத்தின் ஆசியநாடுகளுக்கான இணைப்பாளர் திரு.ரவீகந்தகேஅவர்கள் கலந்து கொண்டு URI அமைப்பினை மன்னார் மாவட்டத்திற்கான கிளையினை உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்துவைத்தார்.
திரு.ரவீகாந்தகே அவர்கள் URI பற்றியஅறிமுகத்தினையும் கொள்கையிணையும் ஒழுக்க விதிமுறைகளினையும் கூறியதுடன் மாவட்டத்தின் ஜக்கியமதங்கள் ஒன்றியத்திற்கான

 (united religions initiative) ற்கானவேலைத்திட்டங்கள் தன்னார்வு அடிப்படையில் சிறுவர் கல்வி ஆன்மீகம் மற்றும் பாதுகாப்பு என்றநோக்கத்தின் அடிப்படையில் (united religions initiative to child education &Preservation)என்ற நாமத்தில் இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

URI மன்னார் மாவட்டத்திற்கான குழுவின் தலைவராக

வண.தர்மகுமாரக் குருக்கள் அவர்களும் பொதுச் செயலாளராக திரு.துஷ்யந்தன்அவர்களும் பொருளாளராக திரு.அ.மெடோசன் பெரேரா அவர்களும் ஏக மனதாக தேர்ந்த்தெடுக்கப்பட்டார்கள் அத்துடன்  அங்கத்தவர்கள் 16 பேருக்கான சின்னம் சூட்டப்பட்டு இயங்கும் நிலையிற்குகொண்டுவரப்பட்டது

இவ்வமைப்பானது மன்னார் மாவட்டத்தின் சிறுவர்கல்வி பாதுகாப்பு விடையத்தில் தன்னார்வரீதியில் அதிககவனமெடுக்கும் என்பதில் உறுதியாக செயற்படவுள்ளது குறிப்படதக்கது.

SHARE