மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்ப்பட்ட அசாதாரண காலநிலையால் வெள்ள அனர்த்தத்துக்கு பாதிக்கப்பட்டு தமது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் 13 தற்க்காலிக முகாம்களில் தங்கியிருந்த மன்னார் பிரதேச செயலக பிரிவிற்க்குட்ப்பட்ட சுமார் 590 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது இதனை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கி மக்களுக்கு வழங்கிவைத்தார் இன் நிகழ்வு 20-11-2015 வெள்ளி இடம்பெற்றது.
இவ் உலர் உணவுப்பொதிகள் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்ட சமைத்த உணவு பெற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பின்வரும் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டது பணங்கட்டுக்கொட்டு, சௌத்பார், ஜிம்ப்ரோன் நகர், ஜீவபுரம், கிருஷ்ணபுரம், எமில்நகர், செல்வநகர், தாழ்வுபாடு, பள்ளிமுனை, எருக்கலம்பிட்டி, பெரிய கரிசல், கிஜரா நகர் ஆகிய கிராமங்களுக்கு வழங்கப்பட்டது.
இவ் வழங்கல் நிகழ்வின்போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ப்ரீமுஸ் சிறைவா அவர்களும் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டிமல் அவர்களும் மன்னர் பிரதேச செயலாளர் திரு.கே.வசந்தகுமார் மற்றும் கிராம அலுவலர்களின் நிர்வாக உத்தியோகஸ்தர் திரு.ராதா ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான பொதிகளை வளன்கிவைத்தனர். இதன்போது மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கிய வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களுக்கு தமது விசேட நன்றிகளை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.