மன்னார் மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான இறுவட்டு வெளியீட்டு விழா 

149
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா துறையினை அிவிருத்தி செய்யும் நோக்கில் மன்னார் மாவட்ட சுற்றுலா தளங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் கைத்தொழில் உற்பத்திகளை மையப்படுத்திய ஆவணப்படம் ஒன்றும் மாவட்ட ரீதியில் வெளியீடு செய்யும் நிகழ்வு இன்று மதியம் 3.00 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
MIC turisam எனும் என்ன கருவில் மன்னார் மாவட்டதில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சுற்றுலா சார்ந்த இடங்களை அடையாளபடுத்தும் முகமாகவும் சுற்றுலா பயணிகளின் வரவினை அதிகரிக்கும் முகமாக கனடா நாட்டின் நிதி உதவியுடன் குறிப்பிட்ட பாடல் மற்றும் ஆவணப்படம் தயாரிக்கபட்ட நிலையில் இன்று வைபவ ரீதியாக இரு விடயங்களையும் உள்ளடக்கிய இறுவட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
குறிப்பிட நிகழ்வில் சுற்றுலா படகு ஓட்டுநர்களுக்கான பயிற்ச்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் பிரதம கனக்காலாளர் மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட WUSC நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.
SHARE