மன்னார் நகர் நிருபர்
மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபர் கே.அன்ரன் மோகன்ராஜ் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை பிரதேசச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பணியாளர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.
மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலகம் வரை அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சர்வ மத வழிபாடுகளை தொடர்ந்து தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.