மன்னார் மீனவர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்ன்றனர்.
மன்னார் மீனவர்களின் வாழ்வாதாரம் 2004ஆம் ஆண்ட சுனாமிக்கு பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக காலநிலை மாற்றத்தினால் மீன் அதிகமாக பிடிபடும் ஒக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலத்தில் கூட மீன்கள் பிடிபடுவது மிக குறைவாக காணப்படவதாக மன்னார் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஓவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான ஆறு மாத காலம் மன்னார் மீனவர்களுக்கு மீன்கள் அதிகம் பிடிபடும் காலம், ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிக்கு பின்னராக காலப்பகுதியில் கடற்றொழிலில் பாரிய மாற்றமும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காலப்பகுதி முடிவடைந்த பின் மீதமாகவுள்ள ஆறு மாத காலப்பகுதி பருவக்காற்று காலம், அதனால் அப் பருவகாற்று காலத்தில் காற்று பலமாக வீசுவதினால் ஆழ் கடல் கடற்றொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈபடுவதில்லை. மாறாக பட்டிவலை, கரைவலை போன்ற கரையோர கடற்றொழிலிலேயே ஈடுபடுவது வழமை. ஆனால் காலநிலை மாற்றத்தினால் மீன் பிடிபடும் காலமான ஒக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலமும் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளநிலையில், பருவக்காற்று காலமாகிய ஏப்ரல் முதல் செப்டோம்பர் வரையான காலத்திலும் கடற்றொழில் மிக பாதிக்கப்பட்டுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் மேலும் பல பாதிப்புகளை தாம் அடைந்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இந்திய மீனவர்களின் வருகையால் ஏற்படும் பாதிப்புக்கள் ஒருபுறமிருக்க மேலும் புதிய பிரச்சிணை ஒன்று தலைதூக்கிவருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தானின் மீன் வியாபார நிறுவனங்களுக்கு அதன் முகவர்கள் மீன் குறைவாக பிடிபடும் இக்காலப்பகுதியில் கூட பிடிபடும் ஒரு சில தரமிக்க மீன்வகைகளை உள்ளூர் மீன் வியாபாரிகளுக்கு வழங்காமல் அதிக விலை கொடுத்து வாங்கும் பாக்கிஸ்தான் மீன் வியாபார முகவர்களுக்கு வழங்குவதால் உள்ளூர் மீன் வியாபாரிகள் மேலும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் உள்ளூர் மீனவர்களின் வருவாய் மேலும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு பல்வேறு பாதிப்புகளை தன்னகத்தே கொண்டு வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது யார்? என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கேள்வி எழுப்புவதுடன் பாதிக்கப்பட மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க மாற்று நடவடிக்கைகள் எடுக்க சம்மந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சுகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.