மன்னார் முசலி மக்களின் மீள்குடியேற்ற தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் ஆராய்வு.

356

மன்னார் முசலி மக்களின் மீள்குடியேற்ற தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் ஆராய்வு.

புனர்வாழ்வு, புனரமைப்பு இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சனிக்கிழமை பகல் சிலாவத்துறை பகுதிக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளைள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

மீள்குடியேற்றத்தில் முசலி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும்
அக்கிராமங்களில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் இங்கு கலந்து கொண்டிருந்த மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்இ பிரச்சிளைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்களால் பாதைஇ வீட்டுத்திட்டம்இ குடிநீர் இன்மைஇ உள்ளக மின் இணைப்புஇ மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய சில தேவைகள் முன்வைக்கப்பட்டது.

மீள்குடியேற்றத்தில் முசலி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அமைச்சரவை பத்திரத்தை நிறுவி அதன் ஊடாக உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் அமைச்சர் சுவாமிநாதனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் சிலாவத்துறை மற்றும் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிளங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு இதில் ஒரு பகுதி நிளத்தை முதற் கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மீள்குடியேற்ற அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

11 12 13 14 15
ஆயசம யுயெனெ -ஆயnயெச

SHARE