மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் அருகல் மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

254

accident45611-04-1470285877

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் அருகல் மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தவராஜா நிரோசன் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னாரில் இருந்து யாழ் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது நாயாத்து வழி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் நீண்ட தூரம் ஓடிய நிலையில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் போது இளைஞன் மோட்டார் சைக்களில் இருந்து தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதேவேளை, இந்த பாதையூடாக வந்த முச்சக்கர வண்டியில் இளைஞன் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரழந்துள்ளார்.

மேலும், சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE