அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட பாதயாத்திரையின் போது தமது கட்சி தலைமையத்துக்கு முன்னால் வந்து கூச்சலிட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாதயாத்திரை நடாத்துவதாக கூறிய கூட்டு எதிர்க்கட்சியை சார்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிரிக்கொத்தவின் முன்னால் பஸ்களை நிறுத்திவிட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களில் ஒரு தொகுதியினர் மதுபான சாலைகளில் வரிசையாக நின்றிருந்ததை மக்கள் ஊடகங்கள் வாயிலாக பார்த்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு வேட்பாளர் சீட்டை வழங்கியமைக்காக நாம் பொது மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.