மன வருத்தமடைந்துள்ள விசாரணை பிரிவு அதிகாரிகள்

252
டந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் அதிகாரிகள் கடுமையான மனவருத்தமடைந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு கிடைத்துள்ள 5000 முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான அதிகாரிகள் மாத்திரமே உள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மொத்தமாக கிடைத்துள்ள 7400 முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு முழு திணைக்களத்திலும் 652 அதிகாரிகள் மாத்திரமே செயற்படுவதாகவும், அவர்களில் 200 பேர் தினமும் நீதிமன்ற நடவடிக்கையில் கலந்துகொள்கின்றனர்.

இந் நிலைமையின் கீழ் பாரிய அளவிலான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

எப்படியிருப்பினும் தாங்கள் மிகவும் அர்ப்பணித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு தொடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த கடிதங்கள் தொடர்பில் சிறப்பான பதில் ஒன்று கிடைக்காமையினால் மோசடிகாரர்கள் சுதந்திரமாக செயற்படுவது பொலிஸ் அதிகாரிகளின் மன வருத்தத்திற்கு காரணமாகியுள்ளது.

அத்துடன் எக்னெலிகொட கடத்தல், ரவி ராஜ், பரராஜசிங்கம் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்படும் இராணுவ அதிகாரிகள் குறித்து மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கும் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்படுவதுடன், பாரிய அளவிலான ஊழல் மோசடிகளை மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

SHARE