மன வருத்தமா? இந்த பரிகாரத்தை செய்திடுங்கள்

235
சிறுவயதாக இருக்கும் போது பலரை திட்டியிருப்போம், அவமானப்படுத்திக்கூட இருக்கலாம். ஆனால் அப்போழுது நம்மை அறியமாலே தவறு செய்துவிட்டோம் என்று எண்ணுவதில்லை.
 
ஆனால் 40-45 வயதை கடக்கும் போது வாழ்க்கையே திருப்பி பார்க்கும்போது அப்பொழுது செய்தது தவறு என்று பலரும் உணருவதுண்டு, அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்கக்கூடாத நிலை கூட இருக்கலாம்.
 
இப்படிபட்ட மனஉளைச்சலுக்கு பரிகாரங்கள் தற்போதுண்டு.
 
இந்த மாதிரி பாதிப்புக்குள்ளோனர் ஜாதகப்படி பார்த்தல் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் ஆலயங்களுக்கு சென்று ஜெபம் மற்றும் தவம் அவர்களை நினைத்து செய்த தவறுகளை நினைத்து மனதார அவர்களுக்காக வேண்டிக் கொள்ளுதல்.
 
நாம் “அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன்” இவ்வாறு செய்து விட்டது மனதார மன்னிப்பு கேட்டு செய்த பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும்.
 
இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு உதவலாம், அவர்களுக்கு ஏதாவது வகையில் மனதளவில் உதவி செய்தல்.
 
இல்லையென்றால் மனநோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம் இவைகே தக்க பரிகாரங்களாகும்.
SHARE