மயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம்

185

மூளைக்குத் தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறு மயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம்.

மேலும் மயக்கம் ஏற்படுவது ஒரு சாதரண விஷயம் என்றாலும் அடிக்கடி மயக்கம் ஏற்பட்டால் அவை உடலில் பல பிரச்சனைகள் உள்ளது எனபதை குறிக்கும்.

மயக்கம் வருவதற்கு என்ன காரணம்?
  • காலை உணவைச் சாப்பிடாமல் இருப்பதுதான் இதன் முதல் காரணம் ஆகும். மேலும் காலை உணவை தவிர்ப்பதால் அவை உடலில் அல்சரை ஏற்படுத்தும்.
  • இரவு நேரங்களில் சரியாக தூங்காமல் இருப்பதும் கூட மயக்கம் ஏற்படுத்த ஒரு காரணமாக உள்ளது.
  • வெயிலில் நீண்ட நேரம் நின்றால் மயக்கம் வரும். உடல் சோர்வு, இந்த மயக்கத்தை வரவழைக்கும்.
  • அளவுக்கு அதிகமாக விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ஓடுவது போன்றவற்றாலும் குறு மயக்கம் வரலாம்.
  • உணவு புரையேறுதல், தொண்டை அடைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களும் இவ்வகை மயக்கத்தை வரவேற்கும்.
  • மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள, காற்றோட்டம் குறைந்த இடங்களில் அதிக நேரம் இருந்தாலும் இந்த மயக்கம் வருவதுண்டு.
அறிகுறிகள் என்ன?
  • சிலருக்குக் மயக்கம் ஏற்படுவதற்கு முன் படபடப்பு ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு முதலிய அறிகுறிகள் தோன்றுவதுண்டு.
தடுப்பது எப்படி?
  • முதல்முறையாக மயக்கம் ஏற்பட்ட பிறகு முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம்.
  • மயக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்வது மீண்டும் மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
  • பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக மயக்கம் வருபவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் மனபலத்தை உண்டாக்கவும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதுதியானம் மற்றும் யோகாசனம் பயில்வது உதவும்.
  • பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.வெயிலில் அளவுக்கு அதிகமாக விளையாடக் கூடாது.
  • அடிக்கடி மயக்கம் ஏற்படுபவர்கள் ஜிம்னாஸ்டிக், கம்பிப் பயிற்சிகள் போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.

SHARE