அமெரிக்காவில் 69 ஆண்டுகள் திருமண பந்தத்தில் காதலோடு வாழ்ந்த தம்பதிகள் ஒரு மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஐசக் வாட்கின் (91), இவர் மனைவி தெரசா (89) இவர்களுக்கு திருமணம் ஆகி 69 ஆண்டுகள் ஆகிறது.
உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்போடு இந்த தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள்.
இதனிடையில், அல்சைமர்ஸ் நோயின் பாதிப்பால் தெரசா சில தினங்களுக்கு முன்னர் காலை வேளையில் உயிரிழந்தார்.
தெரசா உயிரிழந்த 40 நிமிடங்கள் கழித்து அவர் கையை கோர்த்தபடி அவர் கணவர் ஐசக்கின் உயிரும் பிரிந்தது.
இதன் மூலம் இறப்பிலும் தங்களை யாரும் பிரிக்க முடியாது என அவர்கள் உணர்த்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்களின் மகள் கிளாரா கெஸ்கிளின் கூறுகையில், ஒருவர் இன்னொருவர் இல்லாமல் வாழ முடியாத அளவுக்கு அவர்களின் காதல் மிகவும் வலிமையாக இருந்தது
அவர்கள் எப்போதும் அன்பில் நிலைத்திருந்தார்கள். இருவரும் இறப்பிலும் ஒன்றாக இருந்திருப்பதை நினைத்து ஆறுதல் அடைவதாக கூறியுள்ளார்.