மரணப்படுக்கையில் போராடும் பெண்ணின் உருக்கமான கோரிக்கை

213

கனடா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயால் அவதியுற்று வரும் பெண் ஒருவர் தான் உயிரிழக்க விரும்பவில்லை என்றும் தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானியா கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் Paddi Wood(68) என்ற பெண் வசித்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு இவருக்கு மிக அரிதாக தாக்கும் பார்கின்ஸன் என்ற தசை சிதைவு நோய் தாக்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் இவர் ஒவ்வொரு நாளும் சுமார் 72 மாத்திரைகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார்.

எனினும், இந்த நோயை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து பெண்மணி பேசியபோது, ‘Duodopa என்ற சிகிச்சை முறையில் தன்னுடைய நோய் நிச்சயமாக குணமாகும். ஆனால், இந்த சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.

இது குறித்து மருத்துவர்கள் பேசியபோது, ‘இந்த சிகிச்சைக்கு கனடாவில் அல்பேர்ட்டா மற்றும் ஓண்டாரியோ மாகாண அரசுகள் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், பிரித்தானிய கொலம்பியா அரசு இந்த சிகிச்சைக்கு இதுவரை அனுமதி தரவில்லை. ஏனெனில், இச்சிகிச்சையில் உயிர் பிழைத்து விடலாம் என்ற எவ்வித ஆதாரங்களும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சிகிச்சை மேற்கொள்ள ஆண்டுக்கு 60,000 டொலர் செலவிட வேண்டும். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் இத்தொகையை செலுத்தி வர வேண்டும் என்பதால் இதற்கு பிரித்தானிய கொலம்பியா அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில், பெண்ணின் கணவர் தங்களது வீட்டை விற்பனை செய்து சிகிச்சை மேற்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார்.

ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் 5 ஆண்டுகள் வரை மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்பது அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

‘சிகிச்சை மேற்கொள்ள இன்றளவும் தீவிர முயற்சி எடுத்து வருகிறேன். என்னுடைய பரிதாப நிலையை கண்டு யாராவது உதவ முன் வருவார்கள்.

இந்த வயதில் நான் உயிரிழக்க விரும்பவில்லை. தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்’ என பெண்மணி அரசுக்கும் பொதுமக்களுக்கும் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

கடனா நாட்டில் 500 பேர்களில் ஒருவருக்கு இந்த கொடூரமான நோய் தாக்குகிறது. தற்போது வரை சுமார் 1,00,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 6,600 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE