மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை ஹிருனிகா இன்று சமர்ப்பிக்க உள்ளார்

343

மரண தண்டனை அமுலாக்கம் குறித்த யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றைய தினம் பாராளுமன்றில் தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை சமர்ப்பிக்க உள்ளார். உத்தேச பிரேரணை இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த உத்தேச யோசனையை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன்  ராமநாயக்க தமக்கு அழைப்பு விடுத்ததாக ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் அது பகிரங்க வாக்கெடுப்பாக அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். சேயா சிறுமி கொலை செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் மரண தண்டனையை மீள அமுல்படுத்துமாறு மக்கள் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE