மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள சவுதி அரசின் நடவடிக்கையை பிரித்தானியா தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சவுதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தலையை துண்டித்து மரண தண்டனை வழங்கும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை 82 குற்றவாளிகளுக்கு சவுதி ஷாரியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மரண தண்டனை வழங்கப்படும் எண்ணிக்கையை அதிகரிக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனித உரிமைகள் அமைப்பு இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானியா அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதுள்ள நிலை நீடித்தால் ஆண்டு இறுதியில் சவுதி அரேபியா 320க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் இருமடங்கு என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 158 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அது 88 என்ற எண்ணிக்கையிலேயே இருந்துள்ளது. சமீபத்தில் சவுதி அரேபியா சென்று வந்துள்ள பாதுகாப்புச் செயலாளர் மைக்கேல் ஃபால்லான் இந்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள உள்விவகார துறை அமைச்சிடம் விவாதித்தார என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் பாதுகாப்புச் செயலாளர் மைக்கேல் ஃபால்லான் பிராந்திய பிரச்சினைகள் குறித்து சவுதி அரசிடம் கலந்தாலோசித்து வந்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |