முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளது.
ஜனாதிபதியினால் குறிக்கப்படும் தினத்தில் உயிர் போகும் வரை வெலிக்கடை சிறைச்சாலையினுள் அவர்களை தூக்கிலிடுமாறு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பு மாத்திரமின்றி, போகம்பர அல்லது வெலிக்கடை சிறைச்சாலையினுள் உயிர் போகும் வரை அவர்களை தூக்கிலிடுமாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் போகம்பர சிறைச்சாலையை தற்போது வரையில் பல்லேகல மற்றும் தும்பரவுக்கு கொண்டு சென்றுள்ளனர். வெகு விரைவில் வெலிக்கடை சிறைச்சாலையும் ஹொரண பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இவ்வாறு சிறைச்சாலைகள் அமைந்துள்ள இடம் மாற்றமடையும் போதும் சிறைச்சாலையின் பெயரும் மாற்றமடையாமையால் வழக்கு தீர்ப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனினும் வழக்கு தீர்ப்பு வழங்கும் போது குறித்த சிறைச்சாலையின் இடங்கள் மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை, பெண்கள் அறை, சிறைச்சாலையின் உத்தியோகபூர்வ இல்லம் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
தற்போது நகர் அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, ஹொரனையில் அமைந்துள்ள 28 ஏக்கர் அளவிலான காணி ஒன்றை சிறைச்சாலை திணைக்களத்திற்கு பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.