மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது!

246
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்…

நீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை விடவும் அதிகரித்துள்ளது.

அண்மைக் காலமாக மரண தண்டனை விதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறைச்சாலைகளில் இடப் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரண தண்டனை கைதிகளை தடுத்து வைத்திருப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளில் 600 பேர் வரையில் மேன்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 30 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் சில தசாப்தங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.

இதேவேளை, மரண தண்டனையை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE