மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் ஒன்பது வருட தலைமறைவு வாழ்க்கையின்பின்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

226

arrest-gg-660x330

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் ஒன்பது வருட தலைமறைவு வாழ்க்கையின்பின்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை, எண்டாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஜேசையா ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு கஹவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய குறித்த நபர் , குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகி உள்ளார்.

சந்தேக நபர் இன்றியே நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் ஆனந்தராஜாவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததுடன், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுமார் ஒன்பது வருடங்களாக தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஆனந்தராஜா அயகம பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

SHARE