முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஒருவரான தெமட்டகொட சமிந்தபோகம்பறை சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை 08.30 மணி அளவில் கண்டியில் உள்ள பல்லேகல போகம்பறை சிறைச்சாலைக்கு சமிந்தவை கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் குறித்த நபரை பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து வரபட்டமை குறிப்பிடத்தக்கது.
வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்கனவே மரண தண்டனை பெற்ற பாதாள உலக குழுவினர் இருந்த காரணத்தினால், இவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தினாலேயே சமிந்த இடம் மாற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.