ஹம்பாந்தோட்டை – தங்காலை பிரதான வீதியில் இருக்கும் தனது பெட்டிக்கடையை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு அனுமதி தருமாறு வயோதிப பெண் ஒருவர் மரத்தின் மீது ஏறி நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த வயோதிபப் பெண்ணே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பெட்டிக்கடை 2011 இல் இருந்து அந்த பகுதியில் இருப்பதாகவும், தற்போது கடையை மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும் வயோதிபப் பெண் கூறியுள்ளார்.