மரியானா ஆழிக்குள் இருந்து கேட்கும் மர்ம சத்தம்

198

உலகில் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு.

இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள் ஆச்சரியத்தை மட்டுமல்ல வியப்பையும் ஏற்படுத்துவண்டு.

இப்படியான ஒரு அதிசய நிகழ்வு உலக கடற்பரப்பில் மிகவும் ஆழமான பகுதியாக கருதப்படும் மரியானா ஆழியில் நடந்து வருகிறது.

உலகில் மிகப்பெரிய பாதாளமான மரியானா ஆழியில் ஆழமான பகுதியில் இருந்து ஒரு விதமான மர்ம சத்தம் கேட்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து 36 ஆயிரம் அடி ஆழத்தில் இந்த சத்தம் கேட்பதாக Hatfield Marine Science Center நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வினாடி முதல் நான்கு வினாடிக்கு ஒரு முறை இந்த சத்தம் கேட்பதாக தெரியவந்துள்ளது.

இந்த சத்தம் திமிங்கிலம் அல்லது வேற்றுகிரக வாசிகள் எழுப்பும் சத்தமாக இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE