மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
“இளவரசி கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி, இளவரசி கேட் மிடில்டன் மார்ச் 31-ம் திகதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்,” என சமீபத்தில் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.