மருத்துவமனையில் சோ தீவிர சிகிச்சை பிரிவில்.

273

‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக அவர் பல முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தை பார்ப்பதற்கு ஆசைப்பட்டார்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து, அவர் கபாலி படத்தை பார்த்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோ தற்போது நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.20-1461137118-cho-ramasamy

SHARE