மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த பெண் நோயாளி

283
அமெரிக்காவை சேர்ந்த பெண் நோயாளி ஒருவர் தனது தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கொனெக்டிகட்டில் உள்ள மில்ஃபோர்ட் நகரை சேர்ந்தவர் டிபோரா கிராவன் (Deborah Craven).

கடந்த ஆண்டு விலா எலும்பில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக யேல் நியூ ஹெவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்துள்ளனர். இந்நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் ஜொயல் ஃபெஸொன் கூறியதாவது, இந்த வழக்கு தொடரப்படுவதற்கு முக்கிய காரணமே மன்னிப்பு என்ற வார்த்தையை மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தாததால் தான்.

கிராவென்னுக்கு தவறான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் இது தொடர்பாக அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக நிர்வாகம் சார்பாக யாருமே மன்னிப்பு கேட்கவில்லை. நிர்வாகத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டு முழு விளக்கம் அளித்திருந்தால் இந்த வழக்கே தொடரப்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கிராவெனிடம் மன்னிப்பு கேட்டதாக யேல் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் எப்போது கேட்கப்பட்டது எந்த விதத்தில் கேட்கப்பட்டது என்பது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்கவில்லை.

மேலும் தவறான சிகிச்சை மேற்கொண்ட தகவலை மருத்துவர் ஒருவர் மூடி மறைக்க முயன்றுள்ளார் என்றும் கிராவென் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் தவறு வெளிப்படையாகவே நிரூபணமாகியுள்ளதால் கிராவென்னு வழக்கில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SHARE