கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இனத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.
இதன் தாவரப்பெயர் ‘டைஃபோனியம் டிரைலோபேட்டம்‘ என்பதாகும்.
இதில் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.
தற்போது கருணைக்கிழங்கை சாப்பிடுவதனால் என்ன என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
- கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.
- உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
- பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது.
- கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.
- மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும்.
- கருணைக்கிழங்கு கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- காசம், குன்ம நோய் போன்ற நோய்களையும் இது குணமாக்கும்.
- சொறி, சிரங்கு, கரப்பான், கழலையைப் போக்கும்.