இலங்கைற்கு தெற்கே விண்பொருள் விழும் என பெரும் எண்ணிக்கையிலான விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் காத்திருந்த போதும், அந்த விண் பொருள் விழவில்லை என தெரிவிக்கப்பட்டது
எனினும் மேகக் கூட்டங்கள் அதிகளவில் காணப்பட்டதனால் இந்த விண் பொருள் விழுவதனை நிலத்திலிருந்து அவதானிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
WT1190F என இந்த விண்பொருளுக்கு பெயரிடப்பட்டிருந்தது. சுமார் ஏழு நீளமான விண்பொருள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக முன்னதாகவே எதிர்வு கூறப்பட்டிருந்தது.
விண்கலமொன்றின் பாகமாக இந்தப் பொருள் இருக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச வானியல் ஆய்வு மையம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வானியல் முகவர் நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இந்த விண்பொருளை படமெடுத்துள்ளனர்.
விமானமொன்றில் பயணித்தவாரே இந்த விண்பொருள் விழுவதனை படமெடுத்துள்ளனர்.
இந்து சமுத்திரப் பகுதியில் வைத்து இந்த விண்பொருளை குறித்த ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.
இந்த விண்பொருள் தொடர்பிலான வீடியோ மற்றும் புகைப்பட தகவல்களை ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.
இந்த விண்பொருள் வீழ்ந்தமை தொடர்பில் ஆய்வு நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
.