மும்பையைச் சேர்ந்த பிரபல டெலிவிஷன் நடிகை பிரதியுஷா(வயது 24) கடந்த மாதம் 1–ந் தேதி மர்மமான முறையில் தனது வீட்டில் பிணமாக கிடந்தார். அவருடைய காதலரும், டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ராகுல்ராஜ் சிங் தூண்டுதலின்பேரில் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ராகுல்ராஜ் சிங் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில், அவருடைய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி பிரதியுஷாவின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், “இந்த வழக்கில் ராகுல்ராஜ் சாட்சியங்களை களைத்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் எனது மகளின் உடலில் சில காயங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதால் அவருடைய முன்ஜாமீனை ரத்து செய்து அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்‘ என்று கூறி இருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வில் வருகிற 30–ந் தேதி விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் ஏ.எம்.சாப்ரே அசோக் பூஷன் மனு மீது விசாரணை நடத்துகின்றனர்.