மர்ம பொருளை வைத்து விட்ட சென்ற நபரால் பரபரப்பு

223

சுவிஸ் பாராளுமன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள உணவகத்தில் மர்ம பொருளை வைத்து விட்டு சென்ற நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சுவிற்சர்லாந்தின் Bern நகரில் பாராளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே Barenplatz என்னும் வணிக வளாகம் உள்ளது.

வணிக வளாகத்துக்கு உள்ளே இருக்கும் உணவகத்தில் மர்ம நபர் ஒருவர் கையில் ஆயுதத்துடன் வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அங்கிருந்தவர்களை குறித்த நபர் மிரட்டியதாக தெரிகிறது. பின்னர், அவர் மர்ம பை ஒன்றை அங்கு வைத்து விட்டு பாரளுமன்றம் அமைந்திக்கும் இடத்தை நோக்கி சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்த சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குறித்த நபரை தேடி பிடித்து கைது செய்தார்கள்.

அவர் உணவகத்தில் வைத்து சென்ற மர்ம பையும் சோதனை செய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

மர்ம பையில் என்ன இருந்தது என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை. தொடர்ந்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

SHARE