மறு அறிவித்தல்வரை யாழ் பல்கலை கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தம்

244

 

மறு அறிவித்தல்வரை யாழ் பல்கலை கழக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் தங்கியுள்ள விஞ்ஞானபீட மாணவர்களை வெளியேறுமாறும் நிர்வாகத்தினரால் பணிக்கப்பட்டுள்ளது

யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல் சம்பவங்களில் 10 மாணவர்கள்வரை காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
விஞ்ஞான பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்கலாச்சார முறைமை புறக்கணிக்கப்பட்டு சிங்கள கலாச்சார முறைமை பின்பற்றப்பட்டமையே மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு இடம்பெறுவதாகவும் இம்முறை வழமைக்கு மாறாக கண்டிய நடனத்துடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கண்டிய நடனமே இம் மோதல் நிலைமைக்கு காரணம் என மாணவர்கள் குறிப்பிட்டனர்

13770391_1564496413852994_1461399013592133120_n 13700046_1564496387186330_8822321393558107640_n - Copy 13700145_1564496397186329_1142743997407825917_n - Copy 13707768_1564496360519666_4202373431627680981_n - Copy 13731651_1564494930519809_8266220376609173452_n - Copy 13686510_1564494947186474_7017108944827985366_n - Copy 13690681_1564495010519801_8586938249728419551_n - Copy 13690684_1564494920519810_4835210712127426830_n - Copy 13690878_1564496437186325_374549083262861620_n - Copy 13699983_1564494963853139_5317106363032759821_n - Copy


குறித்த மோதல் சம்பவத்தால் யாழ்.பல்கலைகழக வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பதட்டம் ஏற்பட்டது.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மோதல் சம்பவத்தை கட்டுப்படுத்தியதுடன் , காயமேற்பட்ட மாணவ , மாணவிகளை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளபோதிலும் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து மாணவர்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சூழ உள்ள பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதோடு வீதி ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையினையும் காணமுடிகிறது.
அத்துடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE