பத்திரிக்கையாளரும், நடிகருமான சோ ராமசாமி மறைவு பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. தற்போது இவரின் மரணத்தை அரிந்த பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் சோ ராமசாமி அஜித்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், இன்றைக்கும் பலராலும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவனாக இருப்பவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி. ஆரை அவரது ரசிகர்கள் வழிப்படவே தொடங்கி விட்டனர்.
அப்பேற்பட்ட எம்.ஜி. ஆரை போன்று இன்று அஜித் உள்ளார். ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி. ஆருக்கு அடுத்தது அஜித்தான். ஆனாலும் எம்.ஜி. ஆருக்கு ஈடுஇணை இல்லை என கூறியுள்ளார்.