மறைந்த தமிழினியின் கோரிக்கைக்கு அமைய ‘ஒரு கூர் வாளின் நிழலின்’ புத்தகம் மூலம் கிடைத்த பணம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு….

261

1241365689Tamilinil

விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவியான தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி ஜெயகுமரன் எழுதிய ‘ஒரு கூர் வாளின் நிழலின்’ புத்தகம் மூலம் கிடைத்த பணம் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைத்த 3 இலட்சம் பணமே குறித்த வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த தமிழினியின் கோரிக்கைக்கு அமைய குறித்த புத்தகத்தால் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதி புற்றுநோய் வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கு வழங்கப்படவுள்ளதாக தமிழினியின் கணவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழினி புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE