மற்ற மொழிகளில் வெளியான நல்ல கதைக்களத்தை கொண்ட படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது சாதாரண விஷயம். அப்படி ரீமேக் செய்யும் படங்களில் ஒரு சில படங்களே மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
தற்போது தமிழ் சினிமாவில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகண்ட 8 படங்களை பற்றி பார்ப்போம்.
திரிஷ்யம்
மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் என்ற வெற்றி படத்தை 2015ல் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார் கமல்ஹாசன்.
மணிசித்ரதாலு – சந்திரமுகி1993ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடித்த இந்த படத்தை 2005ல் ரஜினி சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார்.
ஒக்கடு – கில்லி
தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு என்ற ஆக்ஷன் படத்தை 2004ல் கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்து விஜய் நடித்திருந்தார்.
How Old Are You – 36 வயதினிலேதன் கணவருடனான விவாகரத்துக்கு பிறகு 2014ல் மஞ்சு வாரியர் நடித்த இந்த படத்தை 2015ல் 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா ரீமேக் செய்து நடித்திருந்தார்.
பொம்மரிலு – சந்தோஷ் சுப்பிரமணியம்
சித்தார்த், ஜெனிலியா 2006ல் நடித்த பொம்மரிலு என்ற படத்தை சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற பெயரில் தமிழில் ஜெயம் ரவி நடித்திருந்தார்.
Nuvvostanante Nenoddantana – உனக்கும் எனக்கும்
சித்தார்த் நடித்த இந்த ரொமாண்டிக் படத்தை தமிழில் ஜெயம் ரவி உனக்கும் எனக்கும் என்று ரீமேக் செய்து நடித்திருந்தார்.
விக்ரமார்குடு – சிறுத்தை
2006ல் ரவி தேஜா நடித்த இந்த ஆக்ஷன் கலந்த என்டர்டெயின்மென்ட் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி சிறுத்தை என்ற பெயரில் நடித்திருந்தார்.
Bodyguard – காவலன்மலையாளத்தில் திலீப் நடித்த இந்த படத்தை விஜய் காவலன் என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார்.