
மலட்டுத்தன்மையால் ஏற்படும் கருவுறாமை பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான உண்மைகள் இதோ,
மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்கள்?
- ஆண்களுக்கு 80 வயதிற்கு மேல் கூட விந்தணுக்கள் இருக்கும். ஆனால் அத்தகைய விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே கருவை உருவாக்கும்.
- பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பது கருவுறுதலுக்கு மிகவும் அவசியம். பெண்களின் 25 வயதிற்கு மேல் கருமுட்டையின் தரம் குறைய ஆரம்பிக்கும். எனவே 30 வயதிற்கு மேல் கருவுறுவது சிரமமாக உள்ளது.
- கருவுறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பே புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் புகைப்பிடிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும்.
- பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட உடல் பருமன், கருமுட்டைக்கு செல்லும் குழாயில் அடைப்பு போன்ற பிரச்சனையின் காரணமாக இருக்கலாம்.
- உடல் பருமன் மட்டுமே கருவுறாமைக்கு காரணமாக இருக்க முடியாது. ஆனால் உடல் பருமனால் ஏற்படும் Polycystic Ovary Syndrome (PCOS) மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.
- உணவு வகைகளில் சில உணவுகள் மட்டும் கருவுறாமை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே கஃபின் கலந்த கோலா மற்றும் காபியை அளவோடு அருந்துவது நல்லது.
- மன அழுத்தம் கருவுறாமை ஏற்படக் காரணமாக இருக்கலாம். எனவே அதற்கு யோகா, தியானம் ஆகிய உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தடுக்கலாம்.