அழகிற்காகவும், அலங்காரத்திற்காகவும் மட்டுமே நாம் ரோஜாவை பூவை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் ரோஜா பல நோய்களுக்கும் தீர்வளிக்க கூடிய ஒரு பூவாக கருதப்படுகின்றது.
ரோஜாவை வைத்து டீ போன்று தயாரித்து குடித்தால் பலமடங்கு இதன் பலனை பெறலாமாம் என சொல்லப்படுகின்றது.
ரோஸ் டீ ஒரு அற்புத மூலிகையாக நமது உடலுக்கு செயல்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகள், மற்றும் மலட்டு தன்மை ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.
அந்தவகையில் இது போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட ரோஸ் டீயை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- கருப்பு மிளகு தூள் – 1 ஸ்பூன்
- தேன் – 1 ஸ்பூன்
- ரோஜா இதழ்கள்- 1 கப்
தேவையானவை
முதலில் தண்ணீரைகொதிக்க விட்டு, அதில் ரோஜா இதழை போடவும்.
இதன் பின் 5 நிமிடம் கழித்து இதனை இறக்கி கொண்டு வடிகட்டி கொள்ளவும்.
இறுதியாக தேன் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து மாதவிடாய் காலங்களில் குடித்து வரலாம்.
மேலும், பெண்களின் மலட்டு தன்மை பிரச்னைக்கும் இது தீர்வை தருகிறதாம்.