மலர்ந்தது முல்லை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அமைப்பு

226
முல்லை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வைத்திய அதிகாரிகள் இருக்கின்ற பொழுதிலும் வைத்திய சேவையில் முல்லை மாவட்டம் பல இடர்களை சந்தித்து வருகிறது. எனவே முல்லை மாவட்டத்தின் மண்பற்றுள்ள வைத்தியர்கள் ஒன்று கூடி பிரச்சினைகளை ஆராய்ந்தமை முல்லை மக்களுக்கு புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் கடமையாற்றும் நாற்பதுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் பல நூறு கி.மீ தூரத்தை கடந்து மேற்படி முயற்சிக்கு ஆதரவு வழங்கியது முல்லை மக்களை பெருமிதமடைய செய்தது.
மேற்படி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 30.10.2016 அன்று மாஞ்சோலை வைத்தியசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி அமைப்பின் தலைவராக டாகடர்.ஆ.சுதர்சன் அவர்கள் பதில் தலைவர்களாக டாக்டர்.மு.சுதர்சன், டாக்டர்.பாஸ்கரன், டாக்டர் சத்தியரூபன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். போசகராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சிவமோகன் செயல்பட உள்ளார்.
unnamed
unnamed-1
SHARE