சுபீட்சம் நிறைந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு எல்லோர் வாழ்விலும்
மலர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக வடமாகாணசபை
உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனது புத்தாண்டு வாழ்த்துச்
செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பிறக்கும் இப்புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் வளமான
வாழ்வும் நிறைவான செல்வமும் நலமான உறவுடன் பெருவாழ்வு கிடைத்திட
வேண்டும் எனவும் ஓவ்வொரு வினாடியும் நாம் இறைவனைத் துதிக்கையில் நாம்
செய்யும் ஓவ்வொரு காரியங்களும் எமக்கு வெற்றியைத் தருவது மட்டுமல்லாமல் மன நிறைவுடன்
சந்தோசத்தையும் அளிக்கும் ஆண்டாக மிளிரும் என அவர் வாழ்த்துச்செய்தியில் வெளியிட்டார்.