நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை இழந்துள்ளது. தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக டி20 அணித்தலைவர் மலிங்கா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து தினேஷ் சந்திமால் டி20 அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷ்க குணதிலகா, சுரங்க லக்மலை டி20 அணியில் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. |