மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இப்றாஹீம் அன்ஸார் மீது நேற்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதி அமைச்சர் ஹர்ஷ த சில்வா சம்பவம் தொடர்பில் காரணங்களைக் கேட்டறிவதற்கு இலங்கையிலுள்ள மலேசியாவுக்கான உயர் ஸ்தானிகரை இன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்துள்ளார்.