வடகொரியா அதிபரின் சகோதரரான கிம் ஜொங் நாம் மலேசியாவில் வைத்து கொல்லப்பட்டது இரண்டு நாடுகளுக்குமிடையே பலத்த முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளது, இது பற்றிய ஆய்வாகவே இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மேலும், வடகொரியா கடல் கடந்து தனது உளவுப்படைகளின் செயற்பாட்டை வைத்திருப்பதானது மேற்குலகத்தை விழிப்பாக்கியுள்ளதுடன், வடகொரியா, கிம் ஜொங் நாமை மலேசியாவில் வைத்துக் கொலை செய்யுமளவிற்கு ஏன் சென்றது? என்ற விடயத்தை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்துள்ளார்.