மலேசியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர், ஏற்கனவே அந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தண்டனை பெற்று விடுதலைப்பெற்றவர் என்று மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளது.
மஹிந்த தரப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் ஊடகங்கள் அவரின் பெயரை கலைமுகுந்தன் என்று குறிப்பிட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே முகிலனே, விமானத்தளத்தில் வைத்து உயர்ஸ்தானிகரிடம் சென்று “மஹிந்த ராஜபக்ஸ எங்கே” என்று கேள்வி எழுப்பிய பின்னர் தாக்குதல் நடத்தியதாக அஸ்வர் தெரிவித்துள்ளார்.