மலேசியாவில் தீவிரமடையும் புலிகளின் ஆதரவுத்தளம்! தூதரகம் மௌனம்

240

download

மலேசியாவில் புலிகளின் ஆதரவுத் தளம் தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் மௌனம் காத்துவருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தற்போது விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.

அண்மையில் மலேசிய பௌத்த விகாரை மற்றும் இலங்கையின் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலின் பின்னணியிலும் அவர்களே செயற்பட்டுள்ளனர்.

அத்துடன் மலேசிய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பிராந்திய துணை அமைச்சர் ராமசாமி போன்றோர் மிகத் தெளிவாக விடுதலைப் புலி ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றுக்கு சார்பாக நடந்து கொள்கின்றனர்.

எனினும் மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இது தொடர்பில் கண்டுகொள்ளாமல் இருப்பதுடன் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மௌனமாக இருக்கத் தலைப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மலேசிய விஜயத்தின் போது அவர் விடுதலைப் புலிகளின் இலக்காக இருப்பதன் காரணமாக அவருக்கு தீவிர பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தூதரகம் மலேசிய அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் முன்வைக்கவில்லை.

கடைசியில் தூதரகத்தின் அசமந்த போக்கு தூதுவர் மீதான தாக்குதலாக நிறைவு பெற்றுள்ளதாகவும் குறித்த ஊடகத்தின் செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE