மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்டதாக்குதலாகத்தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸதெரிவித்துள்ளார்.
மலேசியா சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய மஹிந்த கட்டுநாயக்கவிமானநிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் திட்டமிட்ட வகையிலே மலேசியா சுற்றுப்பயணம் அமைந்ததாகவும், அதன்படியேதன்னுடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தான் செல்லவிருந்த விகாரைஒன்றின் தேரர் தாக்கப்பட்டமையினால் குறித்த தேரருக்கு ஏற்பட்டுள்ளபிரச்சினையை கருத்திற் கொண்டு அங்கு செல்வதை தவிர்த்து விட்டதாகவும்தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் கொள்கைகளுக்கும் பாரிய வேற்றுமை உள்ளதாகவும், எனவே ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் வரை தான் கட்சியுடன்இணைந்திருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.