மலேசியாவில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து தொழிலாளர்களை அனுப்பும் திட்டம் குறித்து மலேசிய அரசாங்கம் ஆராயவுள்ளது.
இந்தக்கோரிக்கையை மலேசியாவின் சிம் டேர்பி குழுமம் விடுத்துள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் இருந்து சிறப்புத்தேர்ச்சி பெற்ற மற்றும் ஓரளவு தேர்ச்சிப்பெற்ற பணியாளர்களை தொழில்களில் இணைத்துக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையை தாம் ஆராய்வதாக இலங்கை வந்துள்ள மலேசிய உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார்.
டேர்பி குழுமம் இலங்கையில் இருந்து 5000 தொழிலாளர்களை தமது பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்காக கோரியுள்ளது.
இந்தக்கோரிக்கையை இலங்கையும் மலேசியாவும் ஏற்றுக்கொண்டால், மலேசிய சமூக கலாசார, தொலைத்தொடர்பு மற்றும் சட்டம் என்பவை தொடர்பில் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழிலாளர்கள் உள்வாங்கப்படுவர் என்று மலேசிய உதவிப்பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அமைச்சர் தலதா அத்துகோரளையை நேற்று சந்தித்தபோது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.