மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முஸம்மிலை நியமிக்க பரிந்துரை.

245

download

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச சேவைகள் பாராளுமன்ற செயற்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மலேசியாவிற்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் அன்ஸார் அண்மையில் மலேசியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு நகர மேயராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE