மலேசியா த லீடர்ஸ் வெளியிட்ட செய்தியில் உண்மைத்தன்மை இல்லை மறுக்கின்றார் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

195

 

மலேசியா த லீடர்ஸ் வெளியிட்ட செய்தியில் உண்மைத்தன்மை இல்லை மறுக்கின்றார் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

21ம் திகதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் மூன்று மணித்தியாளயத்திற்கு பிறகு மலேசியன்  த லீடர்ஸ் செய்தி சேவை தன்னிடம் இக் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பே காரணமா என என்னிடம் வினவியது அதற்கு நான் கூறிய பதில் எந்த முஸ்லிம் தீவரவாத அமைப்பு இச் சம்பவத்துடன் தொடர்பு பட்டள்ளது என இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை பலரும் பலவாறு சந்தேகப்படுகின்றார்கள். தௌஹித் ஜமா அத் அமைப்புத்தானா என்பது விசாரணையின் பின்னரே தெரிய வரும் என்று பதிலளித்தேன். இக் குண்டு வெடிப்பு தொடர்பில் எனக்கு முதலே தெரிய வந்தது என்ற தோரணையில் மலேசியன் த லீடர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையில் ஊடகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தற்போது தான் இவ் தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பு இக் குண்டு தாக்குதல் தொடர்பில் உரிமைக்கோரியுள்ளது. ஆகவே இவ் அமைப்பில் உள்ளவர்களை கைது செய்யவும் இனிமேலும் இவ்வாறு இடம் பெறாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் ஹிஸ்புல்லாஹ் தினப்புயல் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

SHARE