மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்.
மஹிந்தவுடன், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் தயா கமகே மற்றும் அனோமா கமகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மலேசியா கோலாலம்பூரில் இடம்பெறவுள்ள பல நிகழ்வுகளில் அங்கு தங்கியிருந்து கலந்துக் கொள்ள மஹிந்த திட்டமிட்டிருந்தார். எனினும் மஹிந்தவின் வருகைக்காக மலேசிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கையால் அவரின் திட்டங்கள் அனைத்தும் புஷ்வானமானது. இதனால் அதிருப்தி அடைந்த மஹிந்த குழுவினர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நேற்றைய தினம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மஹிந்த எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.