விரதங்களுள் கலியுகவரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய மிகச் சிறந்த விரதம் கந்த ஷஷ்டி விரதமேயாகும். இவ்விரதம் இந்தியாவில் மிகச் சிறந்த பழைமையும் பெருமையும் மிக்க திருச் சொந்தூர்இ திருப்பரங்குன்றம் முதலிய அறுபடை வீடுகளிலும்இ மிகச் சிறப்பாக பக்தி பூர்வமாக மக்களால் விரும்பி மன ஒருமைப்பாட்டுடன் அனுட்டிக்கப்படுகின்றது. வருடந்தோறும் ஐப்பசி மாத தீபாவளியினையடுத்து வரும் பிரதமை முதல் ஷஷ்டியீறாகவுள்ள ஆறு நாட்களிலும் பக்தி சிரத்தையுடன் கைக்கொள்ளப்படும் விரதம் இதுவாகும். அடியார் விரும்பும் பேறுகளையும் சகல செளபாக்கியங்களையும் சிறப்பாக புத்திர பாக்கியத்தையும் தரவல்லது இவ்விரதம். இதனை “சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” எனும் பழமொழி உணர்த்துகின்றது.
மேற்படி கந்கசஷ்டி விரதம் மலையத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் இன்று காப்பு கட்டுதலுடன் ஆரம்பமானது. அதன் ஒரு கட்டமாக இன்று (31) புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பூஜைகளும் ஆராதணைகளும் ஆலய பிரதம குரு சிவாகம சிவஸ்ரீ நாராயண சபாரத்தன குருக்கள் தலைமையில் நடைபெற்று காப்பு கட்டுதல் நடைபெற்றது. இந்த தெய்விக நிகழ்வுகளிலும் பூஜைகளிலும் பெரும் திறலான மக்கள் கலந்துக் கொண்டார்கள் குறிப்பாக பெண்கள் கலந்தக் கொண்டார்கள். இதன் போது ஒமம் வளர்த்தல்¸ அபிஷேகம்¸ ஆராதணை¸ விஷேட பூஜைகள். போன்றன நடைபெற்றன.




