மலையகத்தில் கடும் மழை – வான் கதவுகள் திறப்பு

82
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்

மலையகத்தில் தொடரும் மழை கால நிலையினால் மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன்  நீர்தேக்கங்களில் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் 15.08.2018 காலை முதல் மஸ்கெலிய மவுசாகலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் முன்று திறந்து விடப்பட்டுள்ளதுடன் மேல் கொத்தமலை நீர்தேக்கத்தின்  வான் கதவுகள் மூன்றும் திறக்கப்பட்டுள்ளது. மேலும்  விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிகின்றது.  மவுசாகலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளமையினால் லக்ஷபான, கெனியன் நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் வெகுவாக உயர்வடைந்துள்தாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு காசல்ரி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தொடர் மழையினால் உயர்தர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அட்டன், தலவாகலை  பிரதான பாதையின் குடாகம பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஒருவழி போக்குவரத்து இடம்பெறுவதாக அட்டன் பொலிஸார் தெரிவித்ததுடன், வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE