மலையகத்தில் கிராமபுற மற்றும் தோட்டபுற பிரதான வீதிகளை நல்லாட்சி அரசாங்கம் இனங்கண்டு சீர்செய்யும் நடவடிக்கைக்கான நிகழ்வினை பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆரம்பித்து வைத்துள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்காக பணிகள் நேற்று இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் வேண்டுகோளுக்கிணங்க இவ் வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக 728 மில்லியன் ரூபாவில் 7 கிராமங்களுக்கான 26 வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தில் ஹட்டன் இட்டிகேகம, உட பொல்கஸ்வத்த பாதை, மினுவந்தெனிய, கினிகத்தேனை எல்லஉட, நோர்வூட் வெஞ்சர், அம்பகமுவ சிலாலேக்கன, கினிகத்தேனை, தாகாம்பிட்டிய போன்ற கிராம மற்றும் தோட்டப்புறங்களுக்கான வீதிகள் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.