மலையக கல்வி அபிவிருத்திற்காக திரண்டு எழுந்த  புஸ்ஸல்லாவ கல்வி சமூகம்

199
தற்போது மலையகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகது. காரணம் படித்த சமூகம் அதிகரித்து வருகின்றமையும் கற்றவர்களும் மலையகத்தில் இருந்து உயர் நிலைக்கு உள்வாங்கபட்டவர்களும் அரசியல் ரீதியாக கல்வி அமைச்சுக்களை பெற்றவர்களும் மலையகத்திற்கு முறையாக சேவை செய்வதாகும். மலையகத்தில் இருந்து கொழுப்பு போன்ற இடங்களுக்கு சென்று வர்த்தகத்தில் உயர் நிலை அடைந்தவர் மலையக கல்வி வளர்ச்சிக்கு பல்வேறுபட்ட உதவிகளை பல்வேறு அமைப்புகளின் ஊடாக சேவை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தை சேர்ந்த ஐ.வி.எஸ்.ஜயன் என்பவர் கொழுப்பில் ஒரு தொழில் அதிபராக செயற்பட்டு வருகின்றார். இவரின் முயற்சியால் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் கற்பித்தலுக்கு உதவும் முகமாக “ஸ்ரீ கல்கி பகவான் மாணவ சேவா சமித்தி” பிரதேச அதிபர்கள் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக பாடசாலைகளின் முன்னெடுக்கப்பட்டு வரும் “செயற்பட்டு மகிழ்வோம்” செயற்திட்டத்திற்கு ஒரு தொகை பொருட்களை பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வு புஸ்ஸல்லாவையில் நடைபெற்றது. இதில் வர்த்தகர்கள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.
தகவலும் படங்களும்:- பா.திருஞானம்
unnamed-12
unnamed-14
unnamed-15
unnamed-16
unnamed-17
unnamed-13
SHARE